கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது
இந்நிலையில்ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியான டெல்லி மக்களுக்கு இலவச வை பை என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்
டெல்லி முழுவதும் 11,000 இலவச வை பை ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்படும் இதன் மூலம் மக்கள் இலவசமாக இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் முதல் கட்டமாக வரும் 16-ஆம் தேதி 100 இடங்களில் தொடங்கப்படும்
7000 ஹாட்ஸ்பாட்டுகள் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களிலும் 4ஆயிரம் ஹாட்ஸ்பாட்டுகள் பேருந்து நிலையங்களில் நிறுவப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்