திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலை ஈஸ்வரர் கோவில் உள்ளது இங்கு கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுக்குள்10 நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருநாள் கொடியேற்றத்துடன் இன்று காலை நடந்தது விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கொடியை ஏற்றுவதற்கான அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவியத் தொடங்கினர்
வருகிற 7ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 10ம் தேதி ஏற்றப்படுகிறது அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் இதில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது