• தமிழகம்
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்

NellaiTamil Online Tamil News Portal

  • Home
  • செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • ஆன்மீகம்
  • வாழ்வியல்
  • சமையல்
  • வேலைவாய்ப்பு
  • மருத்துவம்
You are at :Home»பிற மாவட்ட செய்திகள்»தூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

sethu 18 Jan 2019 பிற மாவட்ட செய்திகள் Leave a comment 52 Views

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் என்பவரும் இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.

இவர் கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தபோது, நீங்கள் யார்? என்று எதிர்கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். திடீர் கைது

கடந்த டிசம்பர் மாதம் 19–ந் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கல்லூரி முன்பு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களிடம் சிலர் வினியோகம் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தூத்துக்குடி பண்டாரம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்ராஜிக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சந்தோஷ்ராஜை அழைத்து சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி திடீரென கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த பண்டாரம்பட்டி மக்கள் உடனடியாக சந்தோஷ்ராஜை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கோவில் மணியையும் தொடர்ந்து அடித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். தொடர்ந்து போராட்டம் நடந்தது. தீவிரம் அடையும்

இதுகுறித்து சந்தோஷ்ராஜின் தாய் வசந்தி கூறியதாவது:–

எனது மகன் காலை 11–30 மணி வரை என்னுடன் இருந்தான். அதன்பிறகு தூத்துக்குடி செல்வதாக கூறினான். அப்போது திடீரென ஒரு செல்போன் அழைப்பு வந்தது. இதனால் அவன் பதற்றத்துடன் புறப்பட்டு சென்றான். இதுவரை அவன் எங்கு இருக்கிறான்? என்று தெரியவில்லை. போலீசார் ஊரைச்சுற்றி நின்று எங்களைத்தான் அடக்க நினைக்கிறார்களே தவிர, மகனை பற்றி தகவல் இல்லை. நாங்கள் ஸ்டெர்லைட் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். முதல்–அமைச்சரும் அதைத்தான் கூறுகிறார். என் மகன் மீது பொய்வழக்கு போடக்கூடாது. என் மகன் வரவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த மகேஷ் கூறும் போது, ‘‘பண்டாரம்பட்டி சந்தோஷ்ராஜை கைது செய்து இருப்பதை, போராட்டத்தை ஒடுக்கும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பார்க்கிறோம். வருகிற 20–ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதால் முன்னெச்சரிக்கையாக இது போன்று நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை. உடனடியாக சந்தோஷ்ராஜை விடுவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் முதல்–அமைச்சர் வருகையின்போது வலுவான போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

2019-01-18
sethu
Twitter Facebook Google + Stumble linkedin Pinterest More

Authors

Posted by : sethu
Previous Article :

பாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

Next Article :

தூத்துக்குடி:மாட்டு வண்டி பந்தயம்

Related Articles

விளாத்திகுளம்:மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்து

sethu 15 Jan 2019

கொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது

sethu 22 Jan 2019
கொடைக்கானல்:தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல்:தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

sethu 14 Jan 2019

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நெல்லை செய்திகள்

  • தென்காசி புதிய மாவட்டத்தை உருவாக்க  அறிக்கை கேட்டது தமிழக அரசு

    தென்காசி புதிய மாவட்டத்தை உருவாக்க அறிக்கை கேட்டது தமிழக அரசு

    31 Jan 2019
  • பாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

    18 Jan 2019
  • நெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு

    18 Jan 2019
  • நெல்லை:எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

    18 Jan 2019
  • நெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி

    18 Jan 2019
  • குலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து

    குலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து

    17 Jan 2019
  • தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்   ;    கோரிக்கை

    தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை

    17 Jan 2019
  • நெல்லை ;  பொங்கல்   மது விற்பனை களைகட்டியது

    நெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது

    17 Jan 2019
  • காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில்  கூட்டம்

    காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்

    17 Jan 2019
  • நெல்லை:சமத்துவ பொங்கல் விழா

    15 Jan 2019

பிற மாவட்ட செய்திகள்

  • கொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது

    22 Jan 2019
  • தூத்துக்குடி:மாட்டு வண்டி பந்தயம்

    18 Jan 2019
  • தூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    18 Jan 2019
  • மதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

    18 Jan 2019
  • மதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா

    18 Jan 2019
  • மதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு

    18 Jan 2019

Recent Posts

  • பேசுவதற்கு நேரம் இல்லை பஞ்சாப் முதல்வர் அமீர்ந்தர் சிங் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
  • சென்னை:பெட்ரோல் விலை இன்று
  • புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தர்ணாவை தர்ணா இடைநீக்கம் செய்தார்.
  • EB தற்காலிக தொழிலாளி கடுமையான மின்அதிர்ச்சியை சந்தித்தார்.
  • இந்திய ராணுவப் படையில் உயிர் நீத்த வீரர்களுக்காகவும் மற்றும் ஆயுத கொள்முதலுக்காகவும் ஒரு புதிய திட்டத்தை அரசாங்கம் துவக்கியுள்ளது.

Advertisement

SOCIAL MEDIA TRENDS

While walking jeez brave much sheep doused.
Scooped uselessly husky oh llama jeepers wow.
Sank alas boyishly richly far outside ostrich
Opposite sneered however and far hugged that
© Copyright 2018, All Rights Reserved
DISCLAIMER | TERMS & CONDITIONS | PRIVACY POLICY