தேவையானப் பொருட்கள்
சேமியா – 200 கிராம்
ரவை – இரண்டு கப்
தயிர் – மூன்று கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – அரை தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
செய்முறை
🍛 முதலில் பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
👉 மிளகு, சீரகத்தை மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
🍛 பிறகு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
🍛 பின்னர் அதில் சேமியா மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி சற்று வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
👉 பிறகு வறுத்த சேமியா, ரவைக் கலவையை கீழே இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
🍛 பின்பு நன்றாக ஆறியவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
👉 அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
👉 பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
🍛 பிறகு, இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி வேக விட்டு எடுத்தால் சுவையான சேமியா இட்லி தயார்.
👉 இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், இட்லி மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.